
நியூஸிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இவ்விரு வீரர்களும் பிரகாசிக்கத் தவறியமையே இதற்கான காரணமாகும்.
'வயதான வீரர்களில் ஒருவர் வெளியேறுவார் என நான் எண்ணுகிறேன். ஹஸி அல்லது பொன்டிங் வெளியேறக்கூடும்' என தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றிய அலன் போர்டர் கூறினார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான ரிக்கி பொன்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமொன்றைக் குவித்து ஏறத்தாழ இரு வருடங்களாகின்றன. அண்மைக்காலமாக அவர் பிரகாசிக்கத் தவறி வருகிறார். எனவே அவராகவே ஓய்வு பெறாவிட்டால் தேர்வாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என முன்னாள் வீரர்கள் பலர் கருதுகின்றனர்.
'பொன்டிங் இவ்விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவுஸ்திரேலிய அணியின் அற்புதமான வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இப்போது அவர் பிரகாசிக்கவில்லை. எனவே ஒவ்வொருவரும் அதைப்பற்றி பேசுகிறார்கள். அவர் தொடர்ந்து விளையாடத் தீர்மானித்தால் மோசமான சூழ்நிலையொன்று ஏற்படும்' என முன்னாள் சுழற்பந்துவீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்ன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment