Wednesday, December 14, 2011

அவுஸ்திரேலியா தொடர்: வருணுக்கு பதில் வினய் குமார் சேர்ப்பு

இந்திய கிரிக்கட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட், 2 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.
இதற்கான அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயம் ஏற்பட்ட காரணத்தினால் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தும் அவரால் விளையாடாத நிலை ஏற்பட்டது.
இவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சேர்க்கப்பட்டிருகிறார். எதிர்வரும் 12ம் திகதி அவுஸ்திரேலியா செல்லும் இந்திய அணியுடன் வினய் குமார் செல்ல இருக்கிறார் என்று இந்திய கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக சச்சின், திராவிட், லட்சுமண், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, விரித்திமன் சஹா ஆகிய 7 பேரும் முன்னதாகவே அவுஸ்திரேலியாவுக்கு சென்று விட்டனர்.
அணித்தலைவர் டோனி உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் வரும் 12ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர்.

No comments:

Post a Comment