
தற்போது டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை வீரர்களில் அறுவர், 3 ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.
திலான் சமரவீர, தரங்க பரணவிதான, துமித் கருணாரட்ன, கௌஷல் சில்வா, சானக வெலகெதர, கனிஷ்க எல்விட்டிகல ஆகியோரே ஒருநாள் போட்டிகளுக்கு முன் தாயகம் திரும்பவுள்ள இலங்கை வீரர்களாவர்.
வளர்ந்துவரும் நட்சத்திரமான ஜீவன் மெண்டிஸ் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.
இதேவேளை டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக பிரகாசிக்கத் தவறிய மஹேல ஜயவர்தன, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்க ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அவர் துடுப்பாட்ட வரிசையில் மேலுயர்த்தப்படலாம் எனவும் இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சுற்றுப்போட்டி எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தென்னாபிரிக்காவுடனான போட்டிகளுக்கான இலங்கை அணி விபரம்:
திலகரட்ன தில்ஷான் (தலைவர்), ஏஞ்சலோ மத்திவ்ஸ் (உபதலைவர்), உபுல் தரங்க, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்ன, திசேர பெரேரா, கோசல குலசேகர, நுவன் குலசேகர, லஷித் மாலிங்க, தம்மிக பிரசாத், தில்ஹார பெர்னாண்டோ, ரங்கன ஹேரத், அஜந்த மெண்டிஸ்.
No comments:
Post a Comment