
பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலுப்பெற்று வருகிறது.
தற்போது நடந்து முடிந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்சில் மொத்தம் 90 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் இந்தியா கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தி்ல் இந்த வெற்றிக்கு பின்னர் ஒய்வு அறிவிக்கலாம் என்றும், தோல்வியடையும் பட்சத்தில் அடுத்து டாகாவில் நடைபெற உள்ள ஆசிய கிண்ணத்திற்கான போட்டி முடிவுக்கு பின்னர் ஓய்வு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment